சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது ஒரு மிகவும் அருவருப்பான தனிநபர் மோதலாக உருவெடுத்துள்ளது.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பேரன் ட்ரம்பை குறிவைத்து, ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் வெளியிட்டுள்ள ஒரு பகீர் வீடியோ உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
“மெலானியாவை எங்கே மற்றும் எப்படி கொலை செய்வது?” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், மெலானியாவின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், அவர் செல்லும் இடங்கள் மற்றும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் குறித்த ரகசியத் தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவில் மெலானியா ட்ரம்ப் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நியூயார்க்கின் ஆடம்பரக் கடைகளுக்குச் செல்லும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மெலானியாவிற்கு ஃபேஷன் மற்றும் உடைகள் மீது இருக்கும் அதீத ஆர்வத்தையே அவரது பலவீனமாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. அவர் வாங்கும் உடைகளில் நரம்பு மண்டலத்தைச் சிதைக்கும் கொடிய வேதிப்பொருள் விஷத்தைக் கலந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் வர்ணனையாளர் வெளிப்படையாகத் தூண்டிவிடுகிறார்.
அதுமட்டுமின்றி, வீடியோவின் இறுதியில் ட்ரம்பின் இளம் மகன் பேரன் ட்ரம்பின் புகைப்படத்தைக் காட்டி, “இது ஆரம்பம்தான், உனக்காக நாங்கள் வருகிறோம்” என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் அமெரிக்க உளவு அமைப்புகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே ஈரானின் தலைநகரான தெஹ்ரானில், ட்ரம்ப் குடும்பத்தினர் அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகளில் இருப்பது போன்ற பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
“ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகத்துடன் வைக்கப்பட்ட அந்தப் போஸ்டர்களைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ போரின் தீவிரத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
தன்னை மற்றும் தனது குடும்பத்தைக் கொல்ல ஈரான் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வருவதாக ட்ரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
ஒருவேளை ஈரான் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால், அதற்குப் பதிலடியாக ஈரானை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவேன் என ட்ரம்ப் மிகக் கடுமையான ராணுவ உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளார்.
கள நிலவரத்தைப் பொறுத்தவரை, ஈரானின் 80 சதவீத ராணுவ இலக்குகளை அமெரிக்கா ஏற்கனவே தரைமட்டமாக்கி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகான முயற்சிகள் தீவிரமாக நடந்து வந்தாலும், மறுபுறம் ட்ரம்ப் குடும்பத்தைக் குறிவைக்கும் இத்தகைய கொடூரமான மிரட்டல்கள் அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளன.
இந்த விவகாரம் வரும் நாட்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
