விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்!! பின்னணி என்ன?

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியான தகவலுக்கு அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. வேளாண்துறை அமைச்சர் தெரிவித்த இந்த தகவல், விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு காவிரி உரிமைக்காக சட்டரீதியாக போராடி வரும் நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது அந்த சட்டப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என்று தெரிவித்துள்ளார். உரிமையை நிலைநாட்டுவதற்குப் பதிலாக பிரச்சினையை நீட்டிக்கும் சூழலே உருவாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதையும், தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்ற சந்தேகத்தையும் எழுப்பினார். காவிரி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுப்பதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கருத்துகளையும் கேட்டறிந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவிரி உரிமை தொடர்பாக கர்நாடகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை முதலமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டார். முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனும், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் சந்திக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News