‘இங்க போயா ஏவுகணை விடுவீங்க ?’ மனசாட்சி இல்லாத ‘அமெரிக்கா’!! கொந்தளித்த ஈரான்!!

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது ஒரு மிகப்பயங்கரமான மற்றும் மனிதாபிமானமற்ற கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதலில், ஈரானின் அஹ்வாஸ் நகரில் உள்ள ஷாஹித் பாகேய் மருத்துவமனை அருகே அமெரிக்க ஏவுகணைகள் விழுந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி உலகையே அதிரவைத்துள்ளது.

இந்த மருத்துவமனை, குறிப்பாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் ஒரு முக்கிய மையமாகும். தாக்குதலின் போது ஏற்பட்ட கடும் அதிர்வுகள் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிஞ்சு குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்தக் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்கின்றன.

அமெரிக்காவின் மத்திய ராணுவக் கட்டளையகம் அதவாது ‘சென்ட்காம்’ (CENTCOM) அமைப்பு, புதன்கிழமை மாலை ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இரண்டாவது கட்டத் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு அமைப்புகளை முடக்குவதே தங்களின் ஒரே இலக்கு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் நேரடி உத்தரவின் பேரில், ஈரானின் ராணுவத் திறனைச் சிதைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவம் வாதிடுகிறது. இருப்பினும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலும், மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் ஏவுகணைகள் விழுவது ஒரு மிகப்பெரிய மனிதாபிமானச் சிக்கலாக மாறியுள்ளது.

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தப் போர் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா தற்போது ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை அமல்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் தனது குரூஸ் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படாத பட்சத்தில், இந்தப் போர் ஒரு மிகப்பெரிய பிராந்திய மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை மீதான இந்தத் தாக்குதல் குறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘பார்ஸ்’ (Fars) விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அஹ்வாஸ் நகர மக்கள் தங்கள் கண் முன்னாலேயே ஏவுகணைகள் விழுவதைக் கண்டு பீதியடைந்துள்ளனர்.

குறிப்பாகப் புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது, சர்வதேசப் போர் விதிகளை மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அதே சமயம், அமெரிக்கா தனது தாக்குதல்கள் மிகத் துல்லியமானவை என்றும், பொதுமக்கள் பாதிப்பைத் தவிர்க்கத் தாங்கள் முயற்சிப்பதாகவும் கூறி வருகிறது. எது எப்படியோ, வல்லரசு நாடுகளின் இந்த அதிகாரப் போட்டியில் அப்பாவி நோயாளிகளும் பிஞ்சு குழந்தைகளும் பாதிக்கப்படுவது உலக நாடுகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

Related News

Latest News