நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள மக்கள் மேடை மக்கள் சேவை, சமூக பங்களிப்பு, இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக லதா அறிவித்த நிலையில், அதற்கு திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் மேடை என்பது அரசியல் கட்சி அல்ல, மக்களுக்கான ஒரு தளம் என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ராணுவ வீரர்கள், இளைஞர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். “ஒன்றாக சேர்வோம்… மக்கள் சக்தியாக உருவெடுப்போம்” என்ற அவரது அழைப்பு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில், இத்தனை ஆண்டுகளாக உங்களிடம் ராகவேந்திரா மண்டபம் இருக்கிறது. அங்கே எத்தனை ஏழை மக்களின் திருமணங்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டுள்ளன?” என்றும், உங்கள் ஆஷ்ரம் பள்ளியில் படிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்களா? அல்லது வசதி படைத்த குடும்பங்களை சேர்ந்தவர்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
ப்ளூ சட்டை மாறனின் பதிவில் அதிகமாக பேசப்பட்ட பகுதி இத்தனை ஆண்டுகளாக மக்கள் சேவை என்ற வார்த்தை கூட பேசாமல் இருந்தவர்கள், இப்போது மட்டும் மக்கள், மக்கள் என்று பேசுவதற்கான காரணம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ரஜினி முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அவரது மனைவி லதா சமூக இயக்கம் ஒன்றை தொடங்கியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இது வெறும் சமூக சேவை இயக்கமா? அல்லது எதிர்காலத்தில் அரசியல் நோக்கம் கொண்ட அமைப்பாக மாறுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
