காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனையா ! தெரியாம கூட இதை மட்டும் செய்யாதீங்க….

பாஸ்டேக்கில் பெரும்பாலும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றாலும் ஆங்காங்கே சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாகப் பலரும் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும், டோல் பிளாசாக்களில் ஸ்கேன் ஆகாமல் அடிக்கடி தாமதம் ஏற்படுவதாகப் புகாரளிக்கிறார்கள். இது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

அதில் கார்களின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஃபாஸ்டேக் கார்டுகள், நாளடைவில் சூரிய வெப்பம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாகத் தங்களின் கதிர்வீச்சுத் திறனை இழந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்படுகிறதாம். மேலும், காரின் முன் கண்ணாடியை அடிக்கடி துடைப்பதாலோ அல்லது கடுமையான கெமிக்கல் கலந்த கிளீனர்களைப் பயன்படுத்துவதாலோ உள்ளே இருக்கும் ஆர்எஃப்ஐடி (RFID) chip சேதமடைகிறது.

மிகக் கடுமையான வெயில், பனி மற்றும் மழையில் கார் தொடர்ந்து பயணிக்கும் போது, கார்டின் ஒட்டும் தன்மை மற்றும் அதன் உள்ளே இருக்கும் சிப் பலவீனமடைகின்றன. பல ஆண்டுகள் தொடர்ந்து ஒரே கார்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இயற்கையான தேய்மானமும் இதற்கு முக்கிய காரணமாக மாறுகிறது.

உங்களது ஃபாஸ்டேக் கார்டு வாங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்.. டோல் கேட்களைக் கடக்கும்போது தொடர்ந்து ‘ஸ்கேன் ஃபெயிலியர்’ அல்லது தேவையற்ற தாமதங்களைச் சந்தித்தால் மாற்ற வேண்டிய நிலைமைக்கு கார்டு தேய்ந்துவிட்டது என்று அர்த்தம். உங்களது ஃபாஸ்டேக் பழுதடைந்தால் புதிய அக்கவுண்ட் தொடங்க வேண்டியதோ அல்லது புதிய செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டியதோ தேவையில்லை.

Related News

Latest News