தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு வழிகளை முயன்று வருகிறார்.
இந்தநிலையில் விஜய் பயன்படுத்தும் வாகனங்களின் நம்பர் பிளேட் குறித்த உணர்வுப்பூர்வமான தகவலொன்று வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம். விஜய் தன்னுடைய BMW காரினை விற்றபிறகு பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார், லெக்ஸஸ் எல்எம் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் என 3 புதிய கார்களை வாங்கினார் .
அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு சிறப்புப் பேருந்தையும் வாங்கினார். விஜய்யின் இந்த அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் ஒரே எண் தான் உள்ளது, அது 0277. BMW மின்சார கார் எண் TN 14 AH 0277, லெக்ஸஸ் LM கார் எண் TN 14 AL 0277, டொயோட்டா வெல்ஃபயர் கார் எண் TN 14 AM 0277. தவெக பிரச்சார பேருந்தின் எண் TN 14 AS 0277.
இதற்கு பின்னால் ஒரு கண்கலங்க வைக்கும் கதை இருக்கிறது. அதாவது சிறுவயதிலேயே இறந்த அவரின் தங்கை வித்யாவின் பிறந்தநாள் தேதி தான் அது. 14-02-1977 தான் வித்யாவின் பிறந்தநாள். அதை குறிக்கும் வகையில் தான் விஜய் தன்னுடைய வாகனங்கள் அனைத்திலும், ஒரே எண்ணையே பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
