தங்கத்தில் புதிய திருப்பம்… தலைகீழாக மாற்றிய இந்தியர்கள்..!! மார்ச் மாதத்தில் நடந்த அதிசயம்..!!

இந்தியர்களுக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு மிக ஆழமானது. பல தலைமுறைகளாக தங்கம் ஒரு சேமிப்பு கருவியாகவும், குடும்ப பாதுகாப்பாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் சிறு தொகையாக சேமித்து தங்க நகைகளாக மாற்றுவது ஒரு பொதுவான பழக்கமாக இருந்தது. தங்கம் அந்தஸ்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், அவசர காலங்களில் உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய சொத்தாகவும் விளங்குகிறது.

ஆனால் சமீப காலங்களில் இந்த பாரம்பரிய போக்கு மாறி வருகிறது. உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் தங்க நகைகளின் தேவை குறைந்து, அதற்கு பதிலாக பேப்பர் அடிப்படையிலான தங்க முதலீடுகள், குறிப்பாக ETF போன்றவற்றில் முதலீடு அதிகரித்துள்ளது. இது இந்தியர்கள் தங்கத்தை வெறும் நகையாக அல்லாமல் ஒரு முதலீட்டு கருவியாக பார்க்கத் தொடங்கியிருப்பதை காட்டுகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு முதல் அதிகரித்தது இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்தது மக்கள் மத்தியில் புதிய சிந்தனையை உருவாக்கியது. இதனால் மக்கள் தங்க நகை வாங்குவதற்கு பதிலாக, குறைந்த தொகைகளில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

இந்த மாற்றம் எதிர்காலத்திலும் தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பேப்பர் தங்க முதலீடுகளுக்கு மாறுவது, இந்தியாவின் முதலீட்டு பழக்கங்களில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிலையில் , மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் தங்க நகை தேவை குறைந்திருப்பதாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது இந்தியாவில் முதன்முறையாக தங்கத்திற்கான டிமாண்டில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. வரலாற்றிலேயே முதல்முறையாக முதல் ஈடிஎஃப் போன்ற பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து நகையாக வாங்குவது குறைந்து இருக்கிறது என உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

Related News

Latest News