முதலீட்டாளர்கள் நிதி தொடர்பான தகவல்களைத் தேடி கூகுள், நிதி வலைத்தளங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் எனப் பல இடங்களை அலசி நேரம் வீணாக்குவதை தவிர்க்க உதவும் வகையில், ரூபீசி (Rupeezy) நிறுவனம் ஃபின்ஏஐ (FinAI) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI)அறிமுகப்படுத்தியுள்ளது
ரூபீசியின் வர்த்தகத் தளத்துடன் இணைந்து செயல்படும் FinAI, சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், ISO 27001 சான்றிதழ், AMFI மற்றும் SEBI அங்கீகாரம் ஆகியவற்றுடன் செயல்படும் ரூபீசி, இந்த வசதியை வழங்குகிறது. FinAI, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளரின் இடர் தாங்கும் திறன், இலக்குகள் மற்றும் சந்தைத் தகவல்களை ஆராய்கிறது.
இந்தச் செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், அசையாச் சொத்துகள் போன்றவற்றை ஒரு சீரான முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் எப்படிச் சரியான விகிதத்தில் சேர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ளத் தேவையான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் தருகிறது. FinAI, ரூபீசியின் டிஜிட்டல் ஆய்வு உதவியாளராகச் செயல்பட்டு, நிதி ஆய்வுகளை எளிமையாக்குகிறது. இது தொழில்நுட்பத்தையும் சந்தை அறிவையும் ஒருங்கிணைத்து, முதலீட்டுத் திட்டமிடலை எல்லோருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகிறது
இந்திய முதலீட்டுச் சந்தைக்கு ஏற்ற பிரத்தியேகமான ஆலோசனைகளையும் FinAI வழங்குகிறது. முதலீட்டாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் சொத்து ஒதுக்கீடு முறைகளை விளக்குவதற்காக, இந்த AI கருவி சந்தைத் தரவுகளையும் நிதி தொடர்பான திட்டங்களையும் ஆய்வு செய்கிறது
கூடுதலாக, பயனர்கள் ரூபீசி எம்சிபி சர்வர் (Rupeezy MCP server) மூலம் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட AI நிதி உதவியாளரை உருவாக்கிக்கொள்ளும் வசதியையும் பெற்றுள்ளனர். சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கிளாட் (Claude) போன்ற தளங்களுடன் எந்தவித கோடிங்கும் இல்லாமல் இதை இணைத்து, தங்களுக்கு ஏற்ற நிதி உதவியாளரை உருவாக்கிக்கொள்ளலாம். இதை அமைப்பது மிகவும் எளிதானது, பயன்படுத்தவும் வசதியானது
