த்ரிஷா இன்ஸ்டா பதிவு: விஜய்க்கு மறைமுக ஆதரவா? வைரல் போஸ்ட் !!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. 234 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் மாலை 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணி வரை வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. சிறிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் எந்த பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக இருந்தன.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு முழுமையாக வந்ததன் தாக்கம் இந்த தேர்தலில் அதிகமாக பேசப்பட்டது. அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல சினிமா பிரபலங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்தனர். சிலர் நேரடியாகவே அந்தக் கட்சியில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு நாளில் பலர் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலானது. இதனால் தேர்தல் நாள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் சென்னை அபிராமிபுரத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் அவர் இன்ஸ்டாகிராமில் ஓட்டு போட்ட புகைப்படத்துடன் “கில்லி” படத்தின் “அர்ஜூனரு வில்லு” பாடலை பகிர்ந்தார். அந்த பாடலில் வரும் விசில் சத்தம் விஜயின் கட்சி சின்னத்தை நினைவுபடுத்துவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

இதனால் த்ரிஷா விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார் என சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருவரையும் சுற்றிய சர்ச்சைகள் இருந்த நிலையில், இந்த பதிவு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

Related News

Latest News