வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!!இதை நோட் பண்ணிக்கோங்க..

ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்ற அச்சம் தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜனநாயகக் கடமையை அனைவரும் எளிதாக நிறைவேற்றுவதற்காக, வாக்காளர் அட்டைக்கு மாற்றாக 12 வகையான அடையாள ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆதார் அட்டை முக்கியமான அடையாளமாக பயன்படுத்தலாம். இதற்குப் பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குப் புத்தகம் ஆகியவையும் செல்லுபடியாகும். தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு போன்ற அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் பயன்படுத்தலாம். இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டைகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளும் செல்லுபடியாகும்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்குச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய சிறப்பு அடையாள அட்டையும் வாக்குச் சாவடியில் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் இந்த மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வந்து சிரமமின்றி வாக்களிக்கலாம்.

இதன் மூலம், வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்தலில் பங்கேற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Related News

Latest News