ஈரானில் அமெரிக்காவின் ‘மரணப் பிடி’! தப்ப முயன்ற சீனக் கப்பலுக்கு நேர்ந்த கதி!

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை தற்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமாக, அமெரிக்கத் தடைகளை மீறிச் செல்ல முயன்ற சீனாவிற்குச் சொந்தமான ‘ரிச் ஸ்டாரி’ என்ற எண்ணெய் கப்பல், அமெரிக்க முற்றுகையை உடைக்க முடியாமல் பாதியிலேயே திரும்பிச் சென்ற சம்பவம், சர்வதேசக் கடல் வணிகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான்-அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை முற்றுகையிடுவதாக அறிவித்தார். இந்த முற்றுகை அறிவிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே, அமெரிக்கப் படைகளின் உத்தரவை மீறி எந்த ஒரு கப்பலும் வெளியேற முடியவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் X தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், ஈரானியத் துறைமுகங்களில் இருந்து வெளியேற முயன்ற ‘ரிச் ஸ்டாரி’ போன்ற பல கப்பல்கள், அமெரிக்காவின் முற்றுகைக்குக் கீழ்ப்படிந்து மீண்டும் ஹோர்முஸ் ஜலசந்திக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கை, கப்பல் உரிமையாளர்கள், கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் போர் இடர் காப்பீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு முன்பு, இந்த வழித்தடத்தில் தினசரி 130-க்கும் அதிகமான கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால், தற்போது அந்தப் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிற்கே குறைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தடைகளை மீறிச் செல்ல முயலும் பிற கப்பல்களின் நிலை என்னவாகப் போகிறது? உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இந்த முட்டுக்கட்டை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News