அமெரிக்காவை சம்பவம் செய்த ‘ஈரான்’! இனி எல்லாமே இப்படித்தான்! அதிர வைத்த புதிய திருப்பம்!

பொதுவாக ஒரு போருக்குப் பிறகு, தோற்றதாக கருதப்படும் நாடு அமைதியாக இருக்கும். ஆனால், ஈரான் இப்போது செய்திருக்கும் காரியம் உலக அரசியலையே அதிர வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு, ஈரானைக் கடலில் முழுமையாக முடக்கிவிட்டோம், இனி அவர்கள் சரணடைந்துதான் ஆக வேண்டும் என்று நினைத்த சமயத்தில், ஈரான் கையில் எடுத்திருக்கும் அந்த இரண்டு “அணுகுண்டு” போன்ற நடவடிக்கைகள், இப்போது ஒட்டுமொத்த சர்வதேச அரசியலையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது.

முதலில், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா கடற்படை மூலம் முற்றுகையிட்டு ஈரானின் 90 சதவீத வர்த்தகத்தை முடக்கியது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க இதுவே போதும். ஆனால், “கடல் வழியை அடைத்தால் என்ன? எங்களிடம் நிலம் இருக்கிறது” என்று ஈரான் தனது “பிளான் பி”யை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

கடல் வழி வர்த்தகத்தை விட்டுவிட்டு, ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் நிலவழியாக வர்த்தகத்தை பலப்படுத்தும் வேலையை ஈரான் மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது. இது அமெரிக்காவின் கடல் முற்றுகையை உடைக்க ஈரான் கண்டறிந்த மிகச் சிறந்த பொருளாதாரத் தற்காப்பு என்று சொல்லப்படுகிறது.

இதைவிட பெரிய அதிர்ச்சி, அந்த இரண்டாவது அதிரடிதான். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 270 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஐநா சபையில் ஈரான் மனு தாக்கல் செய்துள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த இழப்பீட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் மட்டும் கேட்கவில்லை.

பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளையும் ஈரான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ளது. இந்த நாடுகள் தங்களது வான்வெளியையும், ராணுவ தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்ததால் தான் தங்கள் மீது தாக்குதல் நடந்தது என்று ஈரான் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அரசியல் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

ஆக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே, ஈரான் ஒரு தெளிவான செய்தியைச் சொல்லிவிட்டது. “நாங்கள் பலவீனமான நாடு அல்ல, எங்களைச் சுற்றி வளைத்தாலும், நிலவழியாக வர்த்தகம் செய்து எங்களால் வாழ முடியும்; அதேபோல், எங்களிடம் மோத நினைப்பவர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்பதுதான் அது.

இனி வரப்போகும் பேச்சுவார்த்தைகள் வெறும் போர் நிறுத்தம் பற்றியதாக இருக்காது, இந்த மாபெரும் இழப்பீட்டுத் தொகை மற்றும் புதிய வர்த்தகப் பாதைகள் குறித்த விவாதங்களாகத்தான் இருக்கும். அமெரிக்கா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News