ஈரானுக்கு ‘ஏவுகணை’ கொடுக்கும் சீனா! கதவை தட்டும் ‘பெரிய ஆபத்து’! டிரம்ப் எச்சரிக்கை!

உலக நாடுகளே உற்றுநோக்கி வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் சீனா உள்ளே நுழைந்திருப்பது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்புத் திறனை மீண்டும் கட்டமைக்க, சீனா அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதற்கு உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா ஈரானுக்கு ஆயுதங்களை விநியோகித்தால், அது சீனாவுக்கு மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உக்ரைன் போரைப் போன்ற சூழலில், ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த சீனா மறைமுகமாக ஆயுதங்களை அனுப்பி வருவதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை, சீனா முற்றிலும் மறுத்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்றும், தேவையற்ற பரபரப்பை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் சீனத் தூதரகம் வாஷிங்டனில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா இதை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஈரான் தனது வான் பாதுகாப்புத் திறனை மீண்டும் கட்டமைக்கத் தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்தச் சூழலில், சீனா ஆயுதங்களை வழங்கினால், அது மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவின் முக்கிய அச்சமாக உள்ளது. அடுத்த மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆயுத விநியோக விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தக்கூடும். அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் இந்த இக்கட்டான நேரத்தில், சீனாவின் இந்த அதிரடி நகர்வு மத்திய கிழக்கு அரசியலில் மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

Related News

Latest News