இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படுவதை 5 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் AI கருவியை உருவாக்கியுள்ளனர்….
இதய தசைகள் பலவீனமடையும் போது, அதைச் சுற்றியுள்ள கொழுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் CT ஸ்கேனில் புலப்படாது.AI கருவி இதயத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு அடுக்குகளில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் நுணுக்கமாக கண்காணித்து, நோயாளிக்கு செயலிழப்பு ஏற்படும் அபாயம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டு Risk Score வழங்குகிறது….
இந்த ஏஐ மென்பொருளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் CT ஸ்கேன்களுடன் இணைத்தால் போதுமானது…. இங்கிலாந்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த கருவி 86%
துல்லியமாக முடிவுகளை வழங்கியுள்ளது.தற்போது இந்தத் தொழில்நுட்பத்தை மருத்துவமனைகளில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும்போது, உயிரிழப்புகளை பெருமளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ளது.பொதுவாக, இதய செயலிழப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்க்காமலும், முறையான உடற்பயிற்சி இல்லாமலும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது உள்ளிட்டவற்றாலும் ஏற்படுகிறது….
