GPay Pocket Money : இந்த அம்சம் எப்படி செயல்படும்?

“Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும். இது பணம் செலுத்தும் முறையை இன்னும் எளிமையாகவும் கட்டுப்பாட்டுடனும் மாற்றுகிறது. இதில் ஒரு Primary user (பெற்றோர் அல்லது உறவினர்) இருப்பார். அவர்களுடைய பேங்க் கணக்கிலிருந்து Secondary user (குழந்தைகள்) பணம் செலவழிக்க அனுமதி வழங்கப்படும்.

சுருக்கமாகச் சொல்வதானால், குழந்தைகள் தங்களது சிறிய தேவைகளுக்காக Google Pay (GPay) மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். ஆனால் அந்தத் தொகை பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்தே கழிக்கப்படும். மேலும், செலவு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் முழுமையாக பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இந்த அம்சம் எப்படி செயல்படும்?

Primary user ஆக இருப்பதற்கு, Google Pay ஆப்பில் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகபட்சமாக 5 secondary users-ஐ சேர்க்கலாம்.

ஒரு secondary user-ஐ சேர்க்க, கீழ்கண்டவை அவசியம்:

  • அவர்களின் மொபைல் எண் உங்கள் contacts-ல் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்
  • அவர்கள் அந்த same number மூலம் Google Pay-யில் பதிவு செய்திருக்க வேண்டும்
  • அவர்களிடம் UPI ID அல்லது UPI Circle QR இருக்க வேண்டும்

பணப் பரிவர்த்தனையை எப்படி நிர்வகிப்பது?

இந்த “Pocket Money” அம்சத்தின் முக்கிய பலன் அதன் கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை.

பெற்றோர்கள் இரண்டு விதமான முறைகளில் இதை பயன்படுத்தலாம்:

மாத வரம்பு முறை:

மாதத்திற்கு அதிகபட்சம் ₹15,000 வரை ஒரு லிமிட் நிர்ணயிக்கலாம். இந்த வரம்புக்குள், குழந்தைகள் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்காமல் தாங்களே பணம் செலுத்தலாம். இது ஒரு prepaid allowance போல செயல்படும்.

ஒப்புதல் முறை:

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பெற்றோரின் அனுமதி அவசியம். முதலில் குழந்தை ஒரு payment request அனுப்பும், அதை பெற்றோர் approve செய்த பிறகே பணம் செலுத்தப்படும். இது சிறிய குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான முறையாகும்.

Related News

Latest News