தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் சுயேச்சை வேட் பாளர்கள் என 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டு பொதுமக்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், பிச்சனூர் ஊராட்சிக்குட்பட்ட 5 மற்றும் 6-வது வார்டுகளில் சாலை, சுகாதாரமான குடிநீர், மின்விளக்கு, கழி வுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
