‘ஆட்சியாளர்களும் தண்டிக்கப்பட வேண்டும்’ : சாத்தான்குளம் வழக்கில் கமல்ஹாசன் வலியுறுத்தல்

சாத்தான்குளம் வழக்கில் போலீசாரின் குடும்பத்தினரே தண்டிக்கப்படும்போது ஆட்சியாளர்களும் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அநீதிக்கு எதிராக போராடிய ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பம், சாத்தான்குளம் மக்கள், விசாரித்த சிபிஐக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். எனவே, கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், மூச்சுத் திணறலால் இறந்தர்கள் என மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News

Latest News