2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், தற்போது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பி ஆக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், காட்டுமன்னார்கோயிலில் திரு இளையபெருமாளின் இளையமகன் ஜோதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார்.
