வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்., பிரச்சாரத்தில் சலசலப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைய தினம் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக அங்கு சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என தனது பேச்சை தொடங்கினார்.

இதனிடையே கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.எஸ். பாபு என்பவரை ஆதரித்து விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றிய விஜய், தனது கட்சி வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்க முயன்றார். அப்போது, கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ். பாபுவின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக மாதவரம் தொகுதி வேட்பாளர் பிரபு என்பவரின் பெயரை உச்சரித்தார்.

திடீரென தொகுதி வேட்பாளர் பெயர் மாறியதைக் கேட்ட அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு நிமிடம் சிறு குழப்பம் ஏற்பட்டது. இந்தத் தகவல் மற்றும் இது தொடர்பான வீடியோக்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் வைரலாகத் தொடங்கின.

Related News

Latest News