2026 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், அக்கட்சித் தலைவர் விஜய் வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், நாளை பெரம்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
