6500 mAh பேட்டரியுடன் 2 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்த விவோ

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் இன்று (மார்ச் 25) தனது புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ ஒய் 11 மற்றும் விவோ ஒய் 21 மாடல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், இந்த இரண்டு புதிய மாடல்களும் பெரிய பேட்டரி திறன் மற்றும் மென்மையான திரை அனுபவத்தை முன்னிறுத்துகின்றன.

முக்கிய அம்சங்கள்

விவோ ஒய் 11 மற்றும் விவோ ஒய் 21 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் சக்திவாய்ந்த 6500mAh பேட்டரி உடன் வெளியாகின்றன. எனினும், சார்ஜிங் வேகத்தில் வேறுபாடு உள்ளது.

  • விவோ ஒய் 21 – 44W விரைவு சார்ஜிங்
  • விவோ ஒய் 11 – 15W சார்ஜிங்

கேமரா

  • விவோ ஒய் 21 – 50MP பின்புற கேமரா
  • விவோ ஒய் 11 – 13MP பின்புற கேமரா
    இரண்டு மாடல்களிலும் முன்புறத்தில் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

திரை வசதிகளைப் பொருத்தவரை, இரு சாதனங்களும் 6.74 அங்குல HD டிஸ்ப்ளே உடன் வருகிறது. மேலும், 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1200 nits பிரகாசம் ஆகியவை திரை அனுபவத்தை மேம்படுத்துகின்றன. செயல்திறன் பகுதியில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் MediaTek Dimensity 6300 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி மற்றும் ஸ்டோரேஜ்

  • விவோ ஒய் 21 – 8GB RAM + 128GB ஸ்டோரேஜ்
  • விவோ ஒய் 11 – 4GB RAM + 128GB ஸ்டோரேஜ்

மொத்தத்தில், இந்த இரண்டு மாடல்களும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News