BSNL – VI அதிரடி கூட்டணி : ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு செக்!

இந்திய டெலிகாம் நிறுவனங்களான தனியார் மற்றும் அரசு நிறுவனமும் ஒன்று இனைந்து செயல்படுவதர்க்கான தயார் நடந்து வருகிறது. இதில் அரசின் BSNL நிறுவனமும் மற்றும் தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone idea (VI) யின் நடுவில் ஸ்பெக்ட்ரம் ஷேரிங் மற்றும் பைபர் கவரேஜ் கொண்டு பேச்சு வரத்தை நடந்து வருகிறது.

இந்த முயற்சி மூலம் இரு நிறுவனங்களின் நிதிசுமை குறையவும், செயல்பாட்டு செலவுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும், இணைந்த உள்கட்டமைப்பின் மூலம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நெட்வொர்க் தரம் மேம்படும். இதனால் மலிவான விலையில் 4G மற்றும் 5G சேவைகள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

மேலும், Vodafone Idea நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 450 பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு நெட்வொர்க் மேம்பாடு மற்றும் 5G சேவைகளை விரைவாக அறிமுகப்படுத்த உதவும். இதன் பின்னணியில் BSNL உடனான உள்கட்டமைப்பு பகிர்வு பேச்சுவார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது Jio மற்றும் Airtel நிறுவனங்கள் சந்தையில் முன்னிலை வகித்து வருவதால், BSNL மற்றும் Vi நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலையை சந்தித்து வருகின்றன. இந்த நிலைமையிலிருந்து மீண்டு வர இந்த கூட்டணி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக Vi நிறுவனம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் 5G சேவையை தொடங்கியுள்ளது. இதன் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் BSNL நிறுவனம் இன்னும் 5G சேவையை அறிமுகப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த கூட்டணி நடைமுறைக்கு வந்தால், பயனர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் கவரேஜ், குறைந்த அழைப்பு துண்டிப்பு (call drop), அதிக இணைய வேகம், 5G சேவையின் விரிவாக்கம், மற்றும் போட்டி காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட ரீசார்ஜ் விலைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News