தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி ஆகும்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

ரொக்கம் – ரூ.2.37 கோடி

மதுபானம் – ரூ.0.18 கோடி

போதைப்பொருட்கள் – ரூ.2.88 கோடி

விலைமதிப்பற்ற உலோகங்கள் – ரூ.16.42 கோடி

இலவசங்கள்/ பிற பொருட்கள் – ரூ.20.80 கோடி

Related News

Latest News