ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து வதந்தி: ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் உலக நாடுகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்தப் போருடன் தொடர்புடைய தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான தாக்குதல் வீடியோக்கள் உருவாக்கி, உண்மையற்ற தகவல்களுடன் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பொதுமக்களிடையே அச்சமும் பதற்றமும் உருவாக்கியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 1,00,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படலாம். இது இந்திய மதிப்பில் சுமார் 25.2 லட்சம் ரூபாயாகும்.

Related News

Latest News