மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகள் எது? இந்தியாவுக்கு எந்த இடம்?

உலக பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தொழிற்துறை, போக்குவரத்து, மின் உற்பத்தி, இரசாயனத் தயாரிப்பு உள்ளிட்ட பல துறைகள் எண்ணெயை பெரிதும் சார்ந்துள்ளன. எனவே, பெரிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்டுள்ள நாடுகள் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உலக அரங்கில் செல்வாக்கு செலுத்துகின்றன.

தற்போது United States மற்றும் Israel இணைந்து Iran மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வரும் இந்த போர் பதற்றம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

இந்த சூழலில், உலகில் அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகள் எவை என்பதை பார்ப்போம்.

வெனிசுலா – சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள்

Venezuela உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடாகும். 303 பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் இருப்பு உள்ளது என மதிப்பிடப்படுகிறது. ரஷ்யாவுடன் நீண்டகால நெருங்கிய உறவுகளை பேணி வரும் இந்த நாடு, பல்வேறு சர்வதேச அரசியல் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது.

சவுதி அரேபியா – சுமார் 267 பில்லியன் பீப்பாய்கள்

Saudi Arabia உலக எண்ணெய் சந்தையில் முக்கிய சக்தியாக திகழ்கிறது. 267 பில்லியன் பீப்பாய்களுக்கு மேற்பட்ட இருப்பு கொண்ட இந்த நாடு, உலகளாவிய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. எண்ணெய் விலைகளை நிலைநிறுத்துவதிலும் சவுதியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது.

கனடா – சுமார் 170 பில்லியன் பீப்பாய்கள்

Canada வட அமெரிக்காவில் முக்கிய எண்ணெய் சக்தியாக உள்ளது. 170 பில்லியன் பீப்பாய்கள் இருப்பு கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவிற்கு அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இது திகழ்கிறது.

ஈரான் – சுமார் 157–158 பில்லியன் பீப்பாய்கள்

Iran உலகின் முக்கிய எண்ணெய் வள நாடுகளில் ஒன்றாகும். பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், தனது எண்ணெய்த் துறையை பராமரித்து வருகிறது.

ஈராக் – சுமார் 145 பில்லியன் பீப்பாய்கள்

Iraq வளைகுடா பிராந்தியத்தில் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. உலக சந்தைக்கு நிலையான விநியோகத்தை வழங்கும் நாடுகளில் இதுவும் ஒன்று.

ஐக்கிய அரபு அமீரகம் – சுமார் 113 பில்லியன் பீப்பாய்கள்

United Arab Emirates வளைகுடா பகுதியில் முன்னணி உற்பத்தியாளராக திகழ்கிறது. பொருளாதார பன்முகத்தன்மைக்கு முயன்றாலும், எண்ணெய் வருவாய் இந்நாட்டின் முக்கிய ஆதாரமாகவே உள்ளது.

குவைத் – சுமார் 100 பில்லியன் பீப்பாய்கள்

Kuwait உலக சந்தைகளுக்கு நிலையான எண்ணெய் விநியோகத்தை வழங்கும் முக்கிய நாடாகும்.

ரஷ்யா – சுமார் 80 பில்லியன் பீப்பாய்கள்

Russia உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும். ஐரோப்பாவிற்கு எரிசக்தி வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்கா – சுமார் 35–50 பில்லியன் பீப்பாய்கள்

United States நிரூபிக்கப்பட்ட இருப்பு அளவில் முதலிடத்தில் இல்லாவிட்டாலும், உற்பத்தி திறனில் உலகின் முன்னணி நாடாக உள்ளது. ஷேல் எண்ணெய் புரட்சிக்குப் பிறகு உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

லிபியா – சுமார் 48 பில்லியன் பீப்பாய்கள்

Libya வட ஆபிரிக்காவின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர். அரசியல் நிலைமை காரணமாக உற்பத்தி இடையூறுகளை சந்தித்து வருகிறது.

இந்தியாவின் நிலை

India சுமார் 4.5 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பு கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அசாம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் உற்பத்தி நடைபெறுகின்றது. இருப்பினும், நாட்டின் தேவைக்கு அது போதவில்லை.

இந்தியா பயன்படுத்தும் எண்ணெயில் சுமார் 85 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போதைய கையிருப்பு, நாட்டின் எரிசக்தி தேவையை சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே பூர்த்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related News

Latest News