Tuesday, February 24, 2026

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் – தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த அதிமுக

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.

வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

12-ம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.

விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News

Latest News