தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380.
ஆண்கள்: 2,77,38,925 பேர்
பெண்கள்: 2,89,60,838 பேர்
மூன்றாம் பாலினத்தவர்: 7,671 பேர்
வாக்காளர்கள் நீக்கம்: 74,07,207 பேர்
பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் form 6 மூலம் ஏற்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை: 27,53,796 பேர்.
