மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான Hindustan Petroleum Corporation Limited (HPCL) நிறுவனத்தில் அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முழு விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
மொத்த காலியிடங்கள்
612
பணியின் தன்மை
அப்ரண்டீஸ் பயிற்சி – என்ஜினியரிங் பிரிவு
(சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
பயிற்சி காலம்
1 ஆண்டு
மாதாந்திர உதவித்தொகை
ரூ. 25,000
கல்வித் தகுதி
பி.இ. / பி.டெக் (சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
வயது வரம்பு (02-03-2026 நிலவரப்படி)
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 25
அரசு விதிமுறைகளின்படி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட).
தேர்வு முறை
மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு
ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
02-03-2026
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
https://www.hindustanpetroleum.com/job-openings
