Saturday, February 21, 2026

தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து – திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனுக்கு பொன்னாடை அணிவிப்பது போல் நடித்து சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளைஞர் ஒருவர் அவரை கழுத்தில் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த தி.மு.க. நிர்வாகி சாமிநாதன் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. நிர்வாகியை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற இளைஞரை கைது செய்த போலீசார், கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News