Monday, February 16, 2026

10 கோடி பயனர்கள் : இந்தியாவில் சாட்ஜிபிடி செய்த புதிய சாதனை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமான OpenAI உருவாக்கிய ChatGPT பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிப்ரவரி மாத நிலவரப்படி, வாரத்திற்கு 10 கோடி பயனர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருவதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சாட்ஜிபிடி பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாடு பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, நாட்டில் சாட்ஜிபிடி பயன்பாடு தொடர்ந்து உயர்ந்து வருவதாக சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News