Thursday, February 12, 2026

விஜய்யின் பிரசார வாகனத்தை மோத வந்த சரக்கு வாகனம்

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதற்காக பயன்படுத்தப்படும் பிரச்சார பேருந்து, 55 நாட்களுக்கு பிறகு இன்று சென்னையிலிருந்து சேலத்தை நோக்கி புறப்பட்டது. பேருந்து சேலம் மாவட்ட எல்லையான நத்தகரை சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது, திடீரென ஒரு சரக்கு வாகனம் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related News

Latest News