Thursday, February 12, 2026

பெரிய அளவில் சரியும் தங்கம்? – இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் சீனிவாசன்

சமீப மாதங்களில் தொடர்ச்சியாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது சற்றே ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. இதனால் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவில் ஏற்படும் சில பொருளாதார மாற்றங்கள் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தலாம் எனப் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் அவர் கூறுகையில், அமெரிக்காவின் பேலன்ஸ் ஷீட்டை கணிசமாகக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பங்குச் சந்தையில் அதிர்ச்சி ஏற்படலாம் என்கிறார். ஒரு காலத்தில் 1 டிரில்லியன் டாலராக இருந்த பேலன்ஸ் ஷீட் 10 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும், அதில் 1 அல்லது 2 டிரில்லியன் டாலர் குறைக்கப்பட்டாலும் சந்தையில் பதற்றம் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் வட்டி விகிதங்கள் உயரும்; பணத்தின் செலவு அதிகரிக்கும். அத்தகைய சூழலில் தங்கம் மற்றும் பங்குச் சந்தை இரண்டிலும் சரிவு காணப்படலாம் என்கிறார்.

தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,090 டாலருக்கு வர்த்தகமாகிறது. பணப்புழக்கம் குறைக்கப்பட்டால் இது 4000 டாலர் வரை சரியக்கூடும்; அதாவது சுமார் 21% வீழ்ச்சி ஏற்படலாம் என ஆனந்த் சீனிவாசன் மதிப்பிட்டுள்ளார். அந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு மாற்றமின்றி இருந்தால், இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் சுமார் ரூ.12,500 வரை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, AI வளர்ச்சியால் பொருளாதாரம் சீராக உள்ளதாகக் கூறிய கெவின் வார்ஷ், வட்டி குறைப்பையும் பணப்புழக்கம் கட்டுப்பாட்டையும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் டாலர் வலுப்பெறும் சூழல் உருவானால் தங்கம் விலை மேலும் குறையலாம் என்றும், இதற்கான முடிவு அமெரிக்க கொள்கை மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்றும் சந்தை வட்டாரங்கள் கணிக்கின்றன.

Related News

Latest News