Saturday, February 7, 2026

நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா? – தவெக விருப்ப மனுவில் 36 கேள்விகள்

த.வெ.க.வில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளான நேற்று 10 ஆயிரம் படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

விருப்ப மனு வாங்க நேரில் வருவதற்கு பதிலாக இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.

கழகத்தில் இணைவதற்கு முன்பு வேறு ஏதாவது கட்சியில், கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா?

காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா?

கழகப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றுள்ளீர்களா?

கழக விதிகளுக்கு எதிராக நடந்ததற்காக உங்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

சாதிச் சங்கங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா?

உள்ளிட்ட 36 கேள்விகள் அந்த விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

Related News

Latest News