Monday, February 2, 2026

சாம்சங் போன் வாங்க ஆசையா? ரூ.13 ஆயிரம் டிஸ்கவுண்ட்., எந்த மாடல்னு தெரியுமா?

நீங்கள் Samsung ஸ்மார்ட்போன்களின் ரசிகராக இருந்தால், இது உங்களுக்கான நல்ல செய்தி. இன்று Samsung Galaxy F70 அறிமுகம் செய்யப்படும் நிலையில், அதனை முன்னிட்டு Samsung தனது பிரீமியம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Galaxy Z Flip7 5G மீது அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் கீழ், Samsung Galaxy Z Flip7 5G போனை ரூ.13,000 வரை இன்ஸ்டன்ட் வங்கி தள்ளுபடியுடன் வெறும் ரூ.99,999 விலையில் வாங்க முடியும். இதைத் தவிர, நோ காஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலமாகவும் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் பெற வாய்ப்பு உள்ளது.

அமேசான் தளத்தில் Samsung Galaxy Z Flip7 5G ரூ.1,09,999 என்ற விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வங்கி தள்ளுபடி மூலம் ரூ.10,000 குறைக்கப்பட்டு, இந்த போன் ரூ.99,999 விலையில் கிடைக்கிறது. மேலும், நோ காஸ்ட் EMI வசதி மற்றும் Amazon Pay கேஷ்பேக் ரூ.3,299 வரை பெற முடியும். இதன் மூலம் மொத்தமாக ரூ.13,500 வரை சலுகை வழங்கப்படுகிறது. இதற்குடன், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், அதன் நிலையைப் பொறுத்து இன்னும் குறைந்த விலையில் இந்த போனை வாங்க முடியும்.

Samsung Galaxy Z Flip7 5G, 6.9 இன்ச் அளவிலான FHD+ Dynamic AMOLED 2X பிரதான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 2520 x 1080 பிக்சல் தீர்மானம், 21:9 விகிதம் மற்றும் 1Hz முதல் 120Hz வரை தகவமைக்கும் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டதாக உள்ளது.

இதன் கவர் டிஸ்ப்ளே 4.1 இன்ச் Super AMOLED Flex Window ஆகும். இதில் 1048 x 948 பிக்சல் தீர்மானமும், 60Hz மற்றும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

Vision Booster தொழில்நுட்பத்துடன், இந்த டிஸ்ப்ளே அதிகபட்சமாக 2,600 நிட்ஸ் வரை பிரகாசத்தை வழங்குகிறது. இதனால் நேரடி சூரிய ஒளியிலும் திரை தெளிவாகக் காணப்படும் என Samsung தெரிவித்துள்ளது. பிரதான திரையும் கவர் திரையும் மென்மையான ஸ்க்ரோலிங், கேமிங் மற்றும் வீடியோ பார்வைக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Related News

Latest News