பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
