Friday, January 30, 2026

அதிமுக – திமுக ஆட்சியில் விலை உயர்வு வித்தியாசம் – நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி கந்தன்சாவடி மற்றும் கே.பி.கே.நகர் வடக்கு பகுதிகளில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன், வீடு வீடாக சென்று முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசி மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் உள்ள விலைவாசியில் உள்ள வித்தியாசங்களை டிஜிட்டல் ரசீதுகளின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கி, இரட்டை இலை சின்னத்திற்கு நூதன முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தால் தற்போதைய உயர்ந்துள்ள விலைவாசி குறையும் என்று பொதுமக்களுக்கு விளக்கி, அதிமுகவிற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க நூதன முறையில் டிஜிட்டல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏற்கனவே தமிழகம் முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுகவினர் டிஜிட்டல் வழியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள 700 பூத்களிலும் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகள் வீடு வீடாக சென்று டிஜிட்டல் முறையில் வாக்குச் சேகரிப்பை துவங்கி உள்ளனர்.

Related News

Latest News