Friday, January 30, 2026

பெண்கள் தங்கும் விடுதியில் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மதுரையைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் வளைகாப்பு நிகழ்ச்சி வருகை தந்தபோது தங்கியிருந்தார்.

விடுதியின் குளியறையில் குளித்துவிட்டு அருகே இருந்த அறையில் உடை மாற்றும்போது அங்கு ஒரு நபர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்த அப்பெண் அதிர்ச்சியடைந்தார். உடனே கூச்சலிட்டு உறவினர்களுடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், பீர் பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு கே11 காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கடலூரைச் சேர்ந்த பெரியசாமி (40) என்பவரை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News