மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், நேற்று (ஜனவரி 28) நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது மனைவியான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
சுனேத்ரா பவார் தற்போது மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ள நிலையில், அவரை மாநில அமைச்சரவையிலும் சேர்க்க மக்கள் மத்தியில் விருப்பம் இருப்பதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் நர்ஹரி ஜிர்வாள் கூறியுள்ளார்.
