Monday, January 26, 2026

பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்து விபத்து : 18 பேர் பலி, 10 பேர் மாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனே, கடலோர காவல் படையினர், கடற்படை கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் இணைந்து விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த படகு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News