தலைநகர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் சேவைகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அசர்பைஜான் ஆகிய நான்கு நாடுகளுக்கான தனது விமான சேவைகளை இந்த மாதம் 28ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் ஈரான் வான்பரப்பை தவிர்த்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த வான்பரப்பை கடந்து செல்லும் மேற்கண்ட நாடுகளுக்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
