Monday, January 26, 2026

ஜனநாயகன் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாரா? அவரே சொன்ன விளக்கம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், “விஜய் அண்ணாவும், வினோத் அண்ணாவும் கேமியோ செய்ய அழைத்ததால் ‘ஜனநாயகன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். இதுகுறித்து விரிவாக சொல்ல முடியாது” என்று தெரிவித்தார். இதன்மூலம் ‘ஜன நாயகன்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

Related News

Latest News