Monday, January 26, 2026

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது

இந்திய விண்வெளி வீரரான, இஸ்ரோவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவிற்கு இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருதான அசோக சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு விரட்டுகாய் வழங்கினார்.

ஜூன் 2025 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி மருத்துவர் கம்னா சுக்லாபெருமிதத்துடன் கண்டு ரசித்தார்.

சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு இவர் இரண்டாவது வீரர் ஆவார். அண்மையில் உத்தரப் பிரதேச அரசால் ‘உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்’ விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

Related News

Latest News