Sunday, January 25, 2026

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News