Sunday, January 25, 2026

தமிழ்நாட்டை சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுக்கு தேர்வு

குடியரசு தினத்தை முன்னிட்டு சீருடைப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர தீரச்செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 89 பேருக்கு ஜனாதிபதி பதக்கம், 664 பேருக்கு சிறப்பான பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதக்கம் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மகேஸ்வரி ஐஜி, அன்வர் பாஷா எஸ்பி, குமாரவேலு டிஎஸ்பி மூன்று பேரும் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு ஆகியுள்ளனர்.

Related News

Latest News