மதுரை மாவட்டம், மேலூரில் இருந்து திருச்சி செல்லக்கூடிய நான்கு வழிச்சாலையில் பள்ளப்பட்டி கிராமம் என்ற பகுதியில் ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் அதற்குப் பின்னால் வந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு ஆம்னி பேருந்தின் பின்பக்கம் மோதியதில் அந்தப் பேருந்து சாலையோரம் இருந்த மின் கம்பியின் மீது மோதியது. இதனால் பேருந்தில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக அடிக்கடி பஸ்கள் விபத்து நடந்து வருகிறது. ஆம்னி பஸ்களின் டிரைவர்கள் கவனக் குறைவாக செயல்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதனால் பஸ்களில் செல்லும் பயணிகள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
