Monday, January 26, 2026

டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு., அவசரமாக தரையிறக்கம்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக, அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் இருந்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி புறப்பட்டார். விமானம் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் வானில் பறந்தபோது, அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக விழிப்புடன் செயல்பட்ட விமானி, விமானத்தை மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் மீண்டும் சுவிட்சர்லாந்து நோக்கி பயணத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக, திட்டமிட்ட நேரத்தை விட சுமார் 2 மணி 30 நிமிடங்கள் தாமதமாக டிரம்ப் புறப்பட்டுச் சென்றார்.

Related News

Latest News