அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது பதவியை இன்று ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார்.
ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்து, தி.மு.க.வில் இணைந்தார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
வால்பாறை தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி காலமானதால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுச்சாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி காலமானதால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளதால், தற்போது எந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் எம்.எல்.ஏ. க்களின் காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
