தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், தனது AI படத்தை Truth Social தளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது” என்று எழுதப்பட்டுள்ளது.
கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
