அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.
முதலில் இந்த படம் ஜனவரி 15ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 23ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து தெறி ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பதிவில், “எங்களின் வேண்டுகோளை ஏற்று தளபதி விஜய் சார் அவர்களின் தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரெளபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
