ஸ்பெயினின் மலகா நகரிலிருந்து மேட்ரிட்டை நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்த அதிவேக ரயில், அடாமுஸ் அருகே தடம்புரண்டது. தடம்புரண்ட அந்த ரயில், எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதி கோர விபத்தாக மாறியது. இந்த விபத்தில் முதற்கட்ட தகவல்களின் படி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் படையினர் தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும், விபத்து நடந்த பகுதிக்கு சுமார் 40 அவசரகால ராணுவ வீரர்களும், 15 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
